Thursday, 8 February 2018

வதந்திகளை பரப்புவோரிடம் உஷாராயிருங்கள்?

Image result for rumours clipart

செப்டம்பர் 2000-ல் NFTE FNTO சங்கங்கள் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தின் விளைவாக BSNL.-ல் சேர்ந்த அனைத்து DOT ஊழியர்களுக்கும் பென்ஷன் பாதுகாக்கப்பட்டது. போராட்டத்தின் முடிவில் போடப்பட்ட உடன்படிக்கை மூலம் நடத்தை விதிகள் 1972 கிளைவிதி 37 A படி ( CCS pension rules, 1972     sub rule 37 A) நாம் BSNL ஊழியர்களாக 01-10-2000 முதல் பாதுகாப்பினை பெற்றோம்.. இது 01-10-2000 முதல் BSNL-ல் இணைந்த ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதன் மூலம் கடந்த 17 வருடங்களாக இன்றுவரை நாம் அரசு பென்ஷனை அரசு நிதியிலிருந்து எந்தவித தடையின்றி பெற்று வருகிறோம்.. அரசு இதுபற்றி 2000 இல் போடப்பட்ட தவறான உத்திரவும் இப்போது சரிசெய்யப்பட்டுவிட்ட்து.
.
இதுபோன்ற சூழலில் சிலர் தவறான வதந்திகளை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். அதுவும் ஓய்வு பெறும் வயது 60-லிருந்து 58-ஆக குறைக்க நிர்வாகம் முயற்சிப்பதாக பரப்பி வருகின்றனர். இதற்கு சில சங்கத்தின் தலைவர்களும் ஒத்துபோவதுபோல பேசி வருவது இதற்கு மேலும் நம்பகத்தனைமையை தருவதாக உள்ளது. அதற்காகவே இந்த விளக்கத்தினை தருகிறோம்.

“அரசு பென்ஷன் CCS( Pension) Rules , 1972 உடன் இணைக்கப்பட்ட ஒன்று. மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுவயது 60இலிருந்து 58 ஆக மாற்றினால் ஒழிய நமக்கு அது வருவதற்கு வாய்ப்பே இல்லை. இதுதான் உண்மை. இந்த சிறிய விஷயம் தெரியாமல் சிலர் வதந்திகளை பரப்பி வருவது கேலிக்குரியது. ஆதலால் நாங்கள் NFTE உறுதியாக கூறுகிறோம் “ தியாகத் தலைவர் ஓ.பி.குப்தா பெற்றுத்தந்த எட்டாவது உலக அதிசயமான பென்ஷன் சட்ட்த்தில் எந்தவிதமான நீர்த்துபோதலையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” அதற்காக அவருக்கு BSNL ஊழியர்கள் வாழ்நாள் முழுதும் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

Image result for rumours clipart

வெளியீடு: NFTE-BSNL சென்னை தொலைபேசி மாநிலம்

No comments: