Saturday, 20 January 2018

Discussion with Chief Labour Commissioner on 19-01-2018:


நமது அகில இந்திய செயலர் NFTCL
தோழர்.சி.கே.மதிவாணன்   மற்றும் தலைவர்  Ashaq Ahamed இவர்களுடன் இன்று 19-01-2018 மத்திய அரசின் தலைமை ஊழியர் கமிஷனர்  Shri Anilkumar Nayak , CLC ( Central) அவர்களுடன் ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையின் போது அகில இந்தியாவிலும் உள்ள ஒப்பந்த தொழிலாளர் குறித்த பிரச்சனைகள் கோரிக்கை மனுவாக கொடுக்கப்பட்டது.



அதனை கனிவோடு கேட்ட அவர் அதுகுறித்து BSNL  நிர்வாகத்துடன் உடனடியாக விவாதிப்பதாக கூறினார். அதிலும் சம்பளம் வழங்குவதில் மாதாமாதம் 7ம் தேதி என்பதில் எந்த சமரசமும் இல்லை என்று கூறினார். அச்சமயத்தில் தமிழகத்தில் சம்பள தாமத்தித்தினால் தற்கொலை செய்து கொண்ட தோழர் பற்றிய செய்தியினை பகிர்ந்து கொண்டோம். அதனை அறிந்த அவர் மிகவும் வருந்தினார். உடனடியாக சம்பள பட்டுவாடா குறித்த நேரத்தில் நடைபெற ஒரு
அதிகாரி ஒவ்வொரு மாநிலத்திற்கும் நியமிக்கப்படுவார் என்ற உறுதியினை அளித்தார்.
நம் சார்பாக  BSNL  நிர்வாகம் 21-10-2016 தொழிலாளர் நலசட்டம் 1926 ற்கு எதிராக வெளியிட்ட உத்திரவை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தப்பட்டது. அதற்கான ஏற்பாட்டினை உடனடி செய்வதாக உறுதி அளித்தார். நமது சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்து விடைபெற்றோம்


News: Com.C.K.MATHIVANAN GENERAL SECRETARY NFTCL 
http://www.nftechennai.org/images/nftea190118.jpg

No comments: