Monday, 6 October 2014

A write upin the Face Book .....


BSNL காஷ்மீர், வடகிழக்கு மலை மாகாணங்கள், அந்தமான் தீவுகள், மற்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்ட இந்தியன் ரயில்வே போல ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்ட 160 வருட பாரம்பரியம் உள்ள ஒரு இந்திய அரசுக்கு சொந்தமான மத்திய அரசு பொது துறை நிறுவனம் ஆகும். 

BSNL 2 கோடிக்கு அதிகமான லேன்ட் லைன் தொலைபேசிகளும்,. 1 கோடிக்கு அதிகமான பிராட் பான்ட் இணைப்புகளும், 12 கோடிக்குஅதிகமான செல் போன் இணைப்புகளும் மற்றும் அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு நெட்வொர்க் இணைப்புகளும் கொண்ட ஒரு மிக பெரிய அரசு நிறுவனம் ஆகும்.

பல்வேறு ஊடகங்களின் திரட்டிய தகவலின் படி மற்ற கம்பனிகளை விட BSNL 40 % குறைந்த கட்டணம்தான்.

BSNL நிறுவனத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பேர் மத்திய அரசு ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

சரி அதனால் நமக்கு என்ன? நமக்கு வேண்டியது செல் போன். அதை யார் கொடுத்தால் என்ன? நாம் வாங்கி பயன் படுத்த வேண்டியதுதானே என்று தான் எல்லோருக்கும் எண்ணத் தோன்றும்.

மற்றொரு கோணத்தில் சிந்தித்து பார்த்தால் உண்மை புரிய வரும்.

இந்தியன் ரயில்வே போல செல் போன் சேவை முழுவதையும் BSNL மட்டும் நடத்தினால், தற்சமயம் உள்ள 70 கோடி செல் இணைப்புகளும் இந்த அரசு BSNL தான் கொடுத்திருக்கும். அப்படி 70 கோடி செல் இணைப்புகள் கொடுக்க அதிகமான ஆட்கள் தேவைப்படும். சுமார் 5 லட்சம் இந்திய இளைஞர்களுக்கு நேரடியாகவும் சுமார் 5 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் மத்திய அரசு வேலை கிடைத்திருக்கும்.

எனவே இந்திய இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு நாம் அனைவரும் அரசு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். அது யாருக்கோ வந்த பிரச்சினை என்று நாம் வாளாவிருந்து விடக்கூடாது. அது நம் வாழ்வாதாரப் பிரச்னை. நமக்கு அரசு வேலை வாய்ப்பை உருவாக்கும் பிரச்னை என்று நாம் அனைவரும் உணர வேண்டும்.

அந்த வகையில் முதற்கட்டமாக நாம் அனைவரும் BSNL க்கு மாறுவோம். நமது அரசு வேலை வாய்ப்பை பெருக்குவோம். தாய் திருநாட்டை நேசிப்போம்.

No comments: