Thursday, 9 October 2014

சே.கு.வே .ரா ....நினைவு. தினம் அக்டோபர். 9


அக்டோபர் 9 ஆம் நாள் உலகப் புரட்சிகாரன் சேகுவோராவின் நினைவு நாள். நேற்று எங்கள் ஆருயிர் தோழர் கோட்டீஸ்வரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நாள். இவர் பிறந்து 47 ஆண்டுகளாகிறது என்றால், 25 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சியில் வாழ்ந்திருக்கிறார்.

எத்தனை அனுபவம் மிக்கப் புரட்சிகர வாழ்க்கை அது.. உடல் சிதையில் எரியும் போது, எங்கள் உடலிலும் தீ பற்றிக் கொண்டது. மரணத்தின் போது அலைமோதும் தோழமைப் பிரிவின் தீயை யார் அறிவார்கள்? மரணத்தால் கூட அறிய முடியாதது அது.
சேகுவேராவை படங்களில் பார்த்திருக்கிறோம். தகவல்களை அறிந்திருக்கிறோம். புரட்சிகர செயல்பாடுகளில் ஈடுபடும் தீவிரமான இளைஞர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது, சேகுவேராவின் ஏதாவது ஒரு குணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றும்.
மரணம் தந்த மாபெரும் துயரத்தோடு என் தோழன். கோட்டீஸ்வரனை யோசித்தேன். சேகுவேராவின் அதே நிதானம். அதே வைராக்கியம். வறுமையையும், தனிப்பட்ட வேதனைகளையும், மறைத்து மற்றவர்களுக்கு புரட்சிகர தன்நம்பிக்கையை கொடுக்கும் அதே புன்முறுவல் பூத்த முகம்.
மாணவர், இளைஞர் மன்றங்களில் பணியாற்றிய காலத்தில், எத்தனை நாட்கள் பசியோடு போராடியிருப்பாய். மணவாழ்க்கையில் எத்தனை ஆண்டுகள் வறுமையோடு போராடியிருப்பாய். அன்று முதல் இன்று வரை இது பற்றி யாரிடமாவது பேசியிருப்பாயா?
பெரும்பாலான குண இயல்புகளில், உன்னை மாவீரன் சேகுவேராவுடன் தான் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது. சேகுவேராவைப் போலவே உனது நினைவுகளால்,செதுக்கப்பட்ட எம் தோழர்கள், நீ நேசித்த வியாசர்பாடியிலும் சென்னையிலும் நேர்மைக் களம் அமைத்து அரசியல் போரை தொடர்வார்கள் என்ற உறுதியை உனக்கு அளிக்கிறோம்.


Courtesy:Com.Magendiran, CPI FB page


No comments: