72ND

72ND
HAPPY INDEPENDENCE DAY

Saturday, 4 October 2014

செய்திகள்
================
அகில இந்திய மாநாடு

நமது அகில இந்திய மாநாடு  மத்தியப்பிரதேசம்  ஜபல்பூர் நகரில் 
கிறித்தவ மேல் நிலைப்பள்ளியில் 10/10/2014 முதல் 12/10/2014 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஜபல்பூரில் உள்ள நமது BRBRAITT பயிற்சி மையத்தில் கட்டண அடிப்படையில் தங்குவதற்கான அறைகள் கிட்டும். பெரிய அறைகளுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் வசூலிக்கப்படும். தேவைப்படும்  தோழர்கள் 0761 2605910 என்ற தொலைபேசி எண்ணில் தங்களது வேண்டுகோளை FAX செய்ய வேண்டும்.  
சென்னை தொலைபேசியிலிருந்து 3ம் தேதி ஒரு பிரிவும், வரும் 6ம் தேதி மற்றொரு பிரிவாகவும் சுமார் 150 தோழர்கள் மாநாட்டில் பங்கெடுக்க இருக்கிறார்கள்.
===========================================================
பரிவு அடிப்படை பணி 

பரிவு அடிப்படையிலான பணி நியமனத்திற்கான தேர்வுக்கூட்டம் HPC இதுவரை டெல்லி CORPORATE அலுவலகத்தில் நடந்து வந்தது. 
இனிமேல் அந்தந்த மாநில நிர்வாகங்களே தேர்வு செய்யலாம் என உத்திரவிடப்பட்டுள்ளது. இதைத்தவிர  வேறு ஏதும் மாற்றங்கள்செய்யப்படவில்லை. வழக்கம் போலவே டெல்லி உத்திரவு வெண்ணெயில் ஊறிய வெண்டைக்காயாக உள்ளது.
========================================================
IDA - விலைவாசிப்படி உயர்வு 

 IDA 6.9 சதம் உயர்ந்துள்ளது.  இத்துடன் மொத்தப்புள்ளிகள் 98.2ஐத் தொட்டு நூற்றுக்கு அருகில் உள்ளது. எனவே 50 சத விலைவாசிப் படியை சம்பளத்துடன் இணைக்கக்கோரி நாம் குரல் கொடுக்க வேண்டும். இதற்கான தீர்மானம் அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்படும் என நம்புகிறோம்.
========================================================
அடக்கி வைக்கப்பட்ட    அநியாய உத்திரவு 

18/09/2014 அன்று இம்மென்றால் சிறைவாசம்.. ஏனென்றால் வனவாசம்.. என்ற வழியில்... ஆர்ப்பாட்டம்,தர்ணா எது நடத்தினாலும் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என டெல்லி உத்திரவு வெளியானது. இது குறித்து 
ஊழியர் தரப்பு  டெல்லியில் உள்ள அதிகாரிகளை சந்தித்து கண்டனத்தி தெரிவித்த பிறகு தற்போது 
அந்த உத்திரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
======================================================

இரண்டு மணிநேர வெளிநடப்பு

சென்னை தொலைபேசியில் இரண்டுமணிநேர வெளிநடப்பு மிகசிறப்பாக நடைபெற்றது.  இது டெல்லியில் உள்ள அதிகாரிகளின் செவிப்பறையில் ஒலித்திருக்கும் என நம்புகிறோம். 

========================================================


No comments: